ஜெயா தொலைக்காட்சியில் ‘குருவே சரணம்’ தொடருக்கு எந்தெந்த மகானை எடுக்கலாம் என்று நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன் அமர்வேன். இன்று மதியம் அப்படித் தேடிக் கொண்டிருந்தபோது ‘மேட்டூர் ஸ்வாமிகள்’ வந்தார். 2013-ஆம் ஆண்டில் கும்பகோணம் அருகே இருக்கிற கோவிந்தபுரத்தில் ஸித்தி ஆகி இருக்கிறார். இந்த மகானின் அனுபவங்களையும், வாழ்க்கையையும் படிக்கிறபோது கண்களில் நம்மையும் அறியாமல் நீர்த் துளிகள் ததும்புகின்றன.

அந்த மகான் ஒரு தீபாவளி தினத்தில் ஸித்தி ஆனார். அன்றைய தினம் தகவல் கேள்விப்பட்டதும், உடனே ஒரு காரில் கோவிந்தபுரம் சென்று, மேட்டூர் ஸ்வாமிகளின் திருவுடலுக்கு நமஸ்காரம் செய்து விட்டு வந்தேன். அது எனக்கான ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். மேட்டூர் ஸ்வாமிகளுடன் பலருக்கும் பல அனுபவங்கள் இருக்கிறபோது, இந்த எளியேனுக்கும் சிறிது பாக்கியம் கிடைத்திருக்கிறது.

இன்று கூகுளில் தேடுகிறபோது ‘சேஜ் ஆஃப் காஞ்சி’யில் கிடைத்த ஒரு கட்டுரையையும் இதில் இணைத்துள்ளேன். அதிர்ஷ்டவசமாக இந்தக் கட்டுரையின் ஆங்கில வெர்ஷனும் கிடைத்தது.

அதிர்ஷ்டவசமாக இந்தக் கட்டுரையின் ஆங்கில வெர்ஷனும் கிடைத்தது.

பெரியவா சரணம். மேட்டூர் ஸ்வாமிகள் சரணம். அன்புடன், பி. சுவாமிநாதன்