* இன்றைய தினம் கோவிந்தபுரம் சென்றிருந்தேன். மேட்டூர் ஸ்வாமிகளின் பக்தர்களும், ஸ்ரீமடத்தின் பக்தகோடிகளும் பெருமளவில் வந்திருந்தார்கள். ஸ்வாமிகளுக்கு நடந்த அபிஷேகக் காட்சிகளைக் கண்ணுற்ற பக்தகோடிகள் பலரது கண்களிலும் நீர் முட்டிக் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது எளிமையான அந்த மகான், என்றென்றும் இதே கோவிந்தபுரம் தபோவனத்தில் நமக்காக இருப்பார் என்கிற திடமான நம்பிக்கை ஏற்பட்டது. அனந்தகோடி நமஸ்காரம்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
முக்கியமான குறிப்பு:
மேட்டூர் ஸ்வாமிகள் தந்த அந்த ஆங்கிலப் புத்தகத்தை தமிழாக்கம் செய்யும் பணி, ஏனோ அமையாமல் போய்க் கொண்டிருக்கிறது. என்றாலும், அதில் இருந்து சிலவற்றை எனது தொடர்களிலும், சொற்பொழிவிலும் பயன்படுத்தி வருகிறேன்.