கோவை வித்யா விகாசினி பள்ளிக் குழுமத்தின் தாளாளரும் பிரபல ஆடிட்டருமான டி.வி. சுரேஷ் அவர்கள், அடியேனின் ஆத்ம நண்பர். மகா பெரியவா தமிழ் தொகுதிகள் ஆங்கில மொழி மாற்றம் செய்யப்படுகிற பணியில் அடியேனுக்குப் பேருதவி புரிந்தவர். இனியும் புரியப் போகிறவர். தமிழில் வெளியான 'மகா பெரியவா' நூல்கள் இதுவரை ஆங்கிலத்தில் மூன்று தொகுதிகள் வந்துள்ளன. இவற்றை தாமரை பிரதர்ஸ் மீடியா (தினமலர்) வெளியிட்டுள்ளது. சமீபத்திய கோவை அனுஷ நிகழ்வின்போது ஆடிட்டர் சுரேஷும் (அடியேனுக்கு வலப்பக்கம்) நண்பர் கிருஷ்ணனும் (அடியேனுக்கு இடப்பக்கம்)... பெரியவா சரணம்.