தமிழ் ஆங்கிலம்
குரு பிரம்மா, குரு விஷ்ணோ, குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம
">

அண்மையில் ஒரு துணுக்கு படித்தேன். ஒரு அன்பர் உலகம் முழுக்க சுற்றலாம் என்று தீர்மானிக்கிறார். ஏன் தெரியுமா? கடவுள் இருக்கிறார்... கடவுள் இருக்கிறார்... என்று சொல்கிறார்களே.. அந்தக் கடவுள் எந்த தேசத்தில் வாழ்ந்து வருகிறார்? என்பதை அறிந்து கொள்வதற்காக. தன் பயணத்தின்படி கடவுளைத் தேடி முதலாவதாக ஒரு வெளிநாட்டுக்குப் போகிறார். அங்கே ஒரு கடையின் வாசலில் போர்டு ஒன்று தொங்குகிறது. அதில், கடவுளோடு நீங்கள் போனில் பேசலாம். அதற்கான வசதி இங்கே உள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆச்சரியப்ப்ட்டுக் கடைக்குள் போய் போனில் பேச எவ்வளவு தொகை என்று கேட்டார். பத்தாயிரம் டாலர் என்று சொன்னார் கடைக்காரர். நோ சொல்லிவிட்டு வேறு ஒரு தேசத்துக்கு ப்ளைட் பிடிக்கிறார். அங்கும் இதே போல் ஒரு கடை வாசலில் போர்டு. ஆனால் அந்த போர்டில் கடவுளோடு பேச எட்டாயிரம் டாலர் என்றூ இருந்தது.'இதுவும் டூ மச்' என்று வந்து விட்டார். மேலும் பல வெளிநாடுகளுக்குப் போயும், கடவுளோடு பேச ஏகப்பட்ட தொகை தர வேண்டி இருக்கிறது என்று தெரிந்து கடவுளோடு அவர் பேசவே இல்லை.

கடவுளைத் தேடிய இந்தத் தொடர் பயணத்தின் கடைசியாக இந்தியாவுக்கு வந்தார். பராமரிப்பு வெகு குறைவாக இருக்கிற ஒரு கடையின் முகப்பில், 'இங்கு கடவுளோடு பேசலாம்'என்று ஒரு போர்டில் எழுதப்பட்டிருந்தது. தொகை குறிப்பிடப்படவில்லை.ஆர்வத்ததுடன் கடைக்காரரிடம், 'எத்தனை டாலர் ஆகும்?' என்று கேட்டார். கடைக்காரர் சிரித்துக் கொண்டே சொன்னார்; 'டாலரும் இல்லை.. மோதிரமும் இல்லை. லோக்கல் கால் செலவுதான் வெறும் ஒரு ரூபாய்.' ஆச்சரியத்துடன் அந்த அன்பர் கேட்டார்; 'என்னது... கடவுளோடு பேசுவதற்கு வெறும் ஒரு ரூபாயா?''ஆம். இது கடவுள் வாழ்கிற தேசம். இங்கு லோக்கல் கால் போட்டாலேகடவுளுடன் பேச முடியும்.' அப்படிப்பட்ட உயர்ந்த இந்த தேசத்தில் நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவாளைப் பற்றியும்,குரு மகிமையையும், ஆன்மீகத்தின் முக்கியத்துவத்தையும் உலகின் பல் இடங்களில் கொண்டு சேர்க்கும் ஒரு மாபெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது என்றால், எந்த ஜன்மத்தில் நான் செய்த புண்ணியமோ?! www.pswaminathan.in என்கிற இந்த தளத்தில் என்னைப் பற்றியும், எனது செயல்பாடுகள், நிகழ்ச்சிகள், நான் எழுதி இருக்கும் புத்தங்கள், என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போன்ற தகவல்களும் இருக்கின்றன. என் குலதெய்வம் சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனின் திருவருளோடும் எனது இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. திருவருளும், குருவருளும் உங்களுக்கும் கிடைக்க அந்த தெய்வங்களைப் பிரார்த்திருக்கிறேன்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
அன்புடன்
பி.சுவாமிநாதன்

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னஸ் ஸந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்