குரு பிரம்மா, குரு விஷ்ணோ, குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரம் பிரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி தன்னஸ் ஸந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்

சுய விவரம் :

பெயர் : பி. சுவாமிநாதன்,
பிறந்த தேதி : 04-11-1964
பெற்றோர் : பிச்சை ஐயர் , ராஜலக்ஷ்மி அம்மாள்
குடும்பம் : மனைவி செல்லா , மகள் பிரியா மடுரா
சொந்த ஊர் : திருபுரம்பியம் (கும்பகோணம் அருகில் , தமிழ்நாடு )
படிப்பு : B.Sc. (Maths)) Govt. College for men - கும்பகோணம் M.A. (Journalism) மதுரை காமராஜர் பல்கழைகலகம்
அனுபவம் : ஆனந்த விகடன் குழுமம் (22 வருடம்) திரிசக்தி குழுமம் ( 3 வருடம்)

தற்போதைய பணி :

ஆன்மீகச் சொற்பொழிவாளராக :

* 'மக்கள் தொலைகாட்சி'யில் 'வாழ்விக்கும் வழிபாடு என்ற தலைப்பில் நம் ஆலயங்களின் புராதனத்தை சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.30 மணி முதல் 7.40 வரை * ' பொதிகை தொலைகாட்சி'யில் 'குரு மஹிமை' என்ற தலைப்பில் பாரத தேசத்து மகான்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 7.45 மணி முதல் 8.00 வரை) தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார்.

பங்கேற்ற தொலைகாட்சி நிகழச்சிகள் :

ஜீ தமிழ் தொலைகாட்சி ( தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் காஞ்சி பெரியவாளின் மகிமையை சுமார் ஒன்றரை வருடம் தொடர்ந்து பேசியது ). சன் நியுஸ் (விவாதங்கள்) விஜய் (பக்தி திருவிழா) ஜெயா ( சிறப்பு விருந்தினர் ) தந்தி டிவி ( சொற்பொழிவுகள் ) ஸ்ரீ சங்கரா ( பல நேரடி ஒளிபரப்புகள் ) மெகா டிவி ....

ஆன்மீக எழுத்தாளாராக :

தொடர்கள் வெளியான இதழ்கள் : ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கிய பீடம் உள்ளிட்டவை. மங்கையர் மலர், ஞான ஆலயம், சூரிய கதிர் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார். தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மீக கட்டுரைகளுக்கு புத்தக வடிவம் கொடுத்து வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் ' நிறுவனம் இவற்றை வெளியிட்டு வருகிறது. எழுதிய நூல்கள் : சுமார் 40-க்கும் மேல்

பயணித்த வெளிநாடுகள் :

சிங்கப்பூர், மலேஷியா, துபாய், பஹ்ரெய்ன், ஒமன்,நியுஸிலாந்து , ஆஸ்திரேலியா.

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள் :

* சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புத தொகுப்பு ) * ஆலயம் தேடுவோம் ( புராதமான - சிதிலமான அலயங்களைத் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுமுக்கு நடத்தி வைத்தது ) * மஹ பெரியவா ( 2 தொகுதிகள் ) மேலும் சில வெற்றி நூல்கள் : திருவடி சரணம் (தொகுதி 1), திருவடி சரணம் (தொகுதி 2), மகா பெரியவா தொகுதி - 2,வைணவத்தின் பெருமையும் அடியார்கள் மகிமையும், பண்டரிபுரத்து மகான்கள் ( இதுவரை வெளியான நூல்களின் பட்டியலை இந்த புத்தகத்தின் இறுதியில் காணலாம்).